Boomikku Irangi Vanthinga

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க – Yealokim Boomikku Irangi vanthinga
ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க
புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க
உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க
என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க
என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க
என் உயிரோடு உயிராக கலந்தீங்க
என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க
பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க
நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2- ஏலோகிம்
சுவாச காற்றே ஜீவ காற்றே
என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4
நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-4