boomiyin kudigaley paadungal

பூமியின் குடிகளே பாடுங்கள்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பூமியின் குடிகளே பாடுங்கள்
பூதள மாந்தர்களே போற்றுங்கள்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
இவர் யார் இவர் யார்
இயேசு ரட்சகரே
இவர் யார் இவர் யார்
பாவ நாசகரே
1.ஈசாயின் அடிமரம் துளிர்த்திடும்
யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்திடும்
பாவம் நீங்க செய்யும்
பாரினை மீட்டுக்கொள்ளும் -2
இவர் யார் இவர் யார்
தீர்க்கன் உரைத்தவரோ
இவர் யார் இவர் யார்
தீர்க்கனின் வார்த்தையமோ
2.சாத்தானின் தலையை நசுக்கிட
சர்ப்பத்தின் சாபத்தை நீக்கிட
சாவை வென்றிடவே
சாந்த குமாரன் வந்தார் -2
இவர் யார் இவர் யார்
மகத்துவ ராஜனாமே
இவர் யார் இவர் யார்
மகிமையின் தேவனமே
பூமியின் குடிகளே பாடுங்கள் பாடல் வரிகள், Boomiyin Kudikalae Paadungal Lyrics