எப்போதுமே எப்போதுமே – Epothumae Epothumae

எப்போதுமே எப்போதுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
எப்போதுமே எப்போதுமே எப்போதுமே இன்ப வாழ்வே
யேசையா என்னோடிருப்பதாலே
1.எப்பொருளும் குப்பை போன்றனவே – மாந்தர்
எல்லோரும் ஓர் நாளில் தூசிதானே
என்னருமை நேச யேசு எனக்கெல்லாம்
அவர் பின்னே எனக்கேது குறை
2.மாதா பிதா உற்றார் மாண்டிட்டாலும் – பின்னும்
மற்றுள்ள இஷ்டர் மறந்திட்டாலும்
மன்னன் கிறிஸ்தேசு மங்கா நேசர்
எனக்கென்ன குறை எனக்கேது பீடை
3.தங்குமிடம் பூமி சத்திரமே – விண்ணின்
தங்கவீட்டின் வாழ்வு நித்தியமே
மங்கா வாழ்வு எனக்கங்கேயுண்டு பின்னே
இங்கே எதை எந்தன் பங்கென்னுவேன்
எப்போதுமே எப்போதுமே பாடல் வரிகள், Epothumae Epothumae Lyrics