நீரே நீரே நீரே – Neerae Neerae Neerae En Ratchippin

நீரே நீரே நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
நீரே , நீரே , நீரே , என் இரட்சிப்பின் தேவனும் நீரே
நீரே , நீரே , நீரே , என்னை விடுவிக்கும் தேவனும் நீரே !
என் நம்பிக்கை , என் கன்மலை
என் மறைவிடம் , என் கேடகம்-2 நீரே , நீரே , நீரே
சரணம்
1.தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர் நீரே
அதிசயம் செய்யும் தேவனும் நீரே
திக்கற்ற பிள்ளைகட்கு சகாயர் நீரே்
நான் நம்பும் துருகமும் நீரே நீரே – நீரே , நீரே , நீரே
2.ஜாதிகள் எல்லாம் துதிப்பவர் நீரே
பயப்படத்தக்கப் பெரியவர் நீரே 2
தீங்குக்கு விலக்கிக் காப்பவர் நீரே
இக்கட்டில் அடைக்கலம் நீரே நீரே- 2- நீரே , நீரே , நீரே