பாவியே நீ போகும் போது கூட – Paaviye Nee pogum Pothum Kooda

பாவியே நீ போகும் போது கூட
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

பல்லவி
பாவியே நீ போகும் போது கூட வருவதென்ன?
கூட வருவதென்ன? கொண்டு நீ வந்ததென்ன?
1. ஆடு மாடு நன்செய் புன்செய் வீடுவாசல் தான் வருமோ?
பாடுபட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ? – பாவி
2. உத்தியோக மதிப்புகளும் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும்
மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ? – பாவி
3. மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி
ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார் ஞானி சாலமோன் தானே – பாவி
4. தேடு நீ கண்டடைவாய் தட்டுத் திறப்பேனென்றார்
கேளு கொடுப்பேனென்றார் கேட்டவரம் தருவார் – பாவி
பாவியே நீ போகும் போது கூட பாடல் வரிகள், Paaviye Nee pogum Pothum Kooda lyrics