chinnanjiru baalagan

சின்னஞ்சிறு பாலகன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துத்தித்தார்
கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துத்தித்தார்
தீர்க்கதரிசியாய் சொன்னவர் பிறந்துத்தித்தார்
இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட
கூடவே இருந்திட பெயரோடு பிறந்துத்தித்தார்
எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துத்தித்தார்
மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துத்தித்தார்
மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார்
அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துத்தித்தார்
அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துத்தித்தார்
அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார்
பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துத்தித்தார்
பரமனின் சித்தம் செய்யப் பாரினில் பிறந்துத்தித்தார்
பரிகார வழியாக இயேசு மனுவாய் பிறந்துத்தித்தார்