Click here to Download Deva Thaayin Maatham ithu allavo mp3 song

தேவ தாயின் மாதம் இது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

Click here to Download Deva Thaayin Maatham ithu allavo mp3 song
தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா -- 2
பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே -- 2
ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே --தேவ தாயின்
தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம் -- 2
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து --2
கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் -- தேவ தாயின்
ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே - 2
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் - 2
இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் -- தேவ தாயின்