சிறுமைப்பட்டவன் மேல் – Sirumaipattavan Mel Sinthaiyullavarae

சிறுமைப்பட்டவன் மேல்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சிறுமைப்பட்டவன்
மேல் சிந்தையுள்ளவரே
தீங்கு நாளில் கர்த்தர் என்னை விடுவித்தாரே
என் உத்தமத்திலே என்னை தாங்கினீர்
உன் சமூகத்திலே நிலை நிறுத்துவீர்-2
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்
என்னிடம் சாய்ந்தேன் கூப்பிடுதலை கேட்டாரே -2
1.உமக்கு விரோதமாய் பாவம் செய்தேன்
என்று உலகம் என்னை அசட்டை செய்தது
என் ஊழியம் அழிய வேண்டுமென்று
சத்துருக்கள் சூழ்ந்து நிற்கையில் – கர்த்தருக்காக
2.வஞ்சனையாய் என்னை பார்க்க வந்து
பொய் அக்கிரமத்தை சேகரித்து கொண்டு
தூற்றினார் தெருவில் போய் நின்று இனி இவன்
எழுந்திருப்பதில்லை என்று விலகின – கர்த்தருக்காக
3.வாக்குதத்தங்கள் ஒழிந்து போயிற்றோ
ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளினாரோ
என் சஞ்சலத்தால் தூங்காத படிக்கு பேசக்கூடாமல்
பயத்தினால் நடுங்கினேன் – கர்த்தருக்காக