சருவேஸ்பரனே சரணம் – Saruveasparanae Saranam

சருவேஸ்பரனே சரணம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

பல்லவி
சருவேஸ்பரனே! சரணம் – சுபதினமதில் மகிழ்
சருவேஸ்பரனே! சரணம்.
சரணங்கள்
1.திருமண முறையைத் தீதறவமைத்தாய்
தீங்கனிக் “காவில் திட முறவே
அருள் தருவாயித் தருணமதிங்கே,
அமர்ந்திடுஞ் செல்வ நண்பருக்கே
ஆதி நாயகா!
2.உத்தம பக்தி, உல் விசுவாசம்;
உளமதில் அன்பு உயிர் நேசம்,
சுத்த இல்வாழ்க்கை, சுகிர்த நற்சேர்க்கை,
சுருதியில் ஆசை பெருகிடவே
ஜீவ நாயகா!
சருவேஸ்பரனே சரணம் பாடல் வரிகள், Saruveasparanae Saranam Lyrics