Deva Dhayabaranai Thuthipathil

தேவ தயாபரனை துதிப்பதில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ தயாபரனை துதிப்பதில் – Deva Dhayabaranai Thuthipathil
பல்லவி
தேவ தயாபரனைத் – துதிப்பதில்
ஓய்வதில்லை இனிமேல்
சரணங்கள்
1. அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்
அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே – தேவ
2. அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கி
அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார் -தேவ
3. கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னை
எண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்- தேவ
4. அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கி
என்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே – தேவ
5. மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில்
மணவாட்டியாக நானும் வானத்திலே சேர்ந்திடுவேன் -தேவ
6. எப்படிப் போற்றுவேனோ என்னரும் நேசரையே
ஏத்தியே எப்பொழுதும் தோத்திரங்கள் ஏறெடுப்பேன். – தேவதயாபரனே