Deva Prasannam - Eva. Antolynjat

தேவ பிரசன்னம் அவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்
ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம் – 2
நான் நடக்கும் போதும்
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
என்னை மூடிய பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்
1.என் பாதை மாறாமல்
ஒரு சேதம் அணுகாமல்
நான் விழுந்து விடாமல்
என்னை காத்த பிரசன்னம் – 2
நான் பாடும் போதும்
நான் பேசும் போதும்
நான் துதிக்கும் போதும்
என்னை மூடிய பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்
2.நான் கதறிய போதும்
கண்ணிர் வடித்த போதும்
பிறர் தூற்றும் போதும்
என்னை தேற்றிய பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்
3.கேரூபீன்கள் சேராபீன்கள்
துதிக்கும் போதும் உலாவும் பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்
அதிகாலையில் என் ஆலயத்தில்
நான் பாடும் போது
இறங்கி வந்த பிரசன்னம் – 2 – தேவபிரசன்னம்
பரலோகத்தின் நிழல் ஆட்டமாய்
எபிநேசர் ஆலயத்தில்
இறங்கி வந்த பிரசன்னம் – 2 – தேவ பிரசன்னம்