Devamagan Mugam Paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவமகன் முகம் பார்க்க ஆசை
அந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை
கற்பனையில் கவிபாட ஆசை
அந்த கற்பனையில் கவிபாட ஆசை
என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை
அன்றுஒருநாள் சோர்வடைந்து நின்றேன்
மனம் தாளாமல் கண்ணீரை கண்டார்
கண்மணியே நான் இருப்பேன் என்றார்
இமை தூங்காமல் உன்னை காப்பேன் என்றார்
பாதம் என்றும் இடறல் மீட்பார்
எந்தன் பாதையிலே வழுவாமல் சேர்ப்பார்
வாழ்வினிலே கோடி இன்பம் தருவார்
என்றும் கைவிடாமல் கண்மணிபோல் காப்பார்
உத்தமியே என்றழைததாலே
அவர் நேசம் என்னை மணவாட்டி ஆக்கும்
பிரியமுடன் வாழுவேனே என்றும்
அவர் இயேசு தெய்வம் என் ஆசை தீர்ப்பார்