Devanae Engal Jeevanae Vaala vaithavarae

தேவனே எங்கள் ஜீவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே
தேவனே எங்கள் ஜீவனே
வாழ வைத்தவரே
1.உயிருள்ள நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
உங்க அன்பு எத்தனை பெரியது தேவனே
நீங்க இரக்கத்தில் ஐசுவரியம்
மிகுந்தவர் தேவனே
2.பாவங்கள் போக்கவே
சொந்த குமாரனைத் தந்தீரே
அதை எண்ணியே நாளெல்லாம்
உம்மை ஆராதிப்பேன்
உங்க அன்பு எத்தனை பெரியது தேவனே
நீங்க இரக்கத்தில் ஐசுவரியம்
மிகுந்தவர் தேவனே
3.சத்யமாம் இயேசுவை
அனுதினம் அறிந்து நான்
விடுதலை பெற்றுமே
உம்மை ஆராதிப்பேன்
உங்க அன்பு எத்தனை பெரியது தேவனே
நீங்க இரக்கத்தில் ஐசுவரியம்
மிகுந்தவர் தேவனே