Devanae neerae en Devan lyrics

தேவனே நீரே என் தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் பிரசன்னம்
தேவனே நீரே என் தேவன்
அதிகாலையில் உம்மை தேடுகிறேன்
கர்த்தரே நீரே என் கர்த்தர்
என் ஆத்துமா உம்மேல் தாகமாய் இருக்கிறதே
என் மாம்சமானது உம்மை என்றும் வாஞ்சிக்கின்றதே
உம் பிரசன்னம் எனக்கு போதும்
உம் வலது கரம் என்னை தாங்கும்
உம் நிழலில் நான் என்றும் வாழனும்
உம் மகிமையால் என்னை சூழ்ந்திடும்
ராஜானே நீரே என் ராஜன்
என் படுகையில் உம்மை நினைக்கிறேன்
தந்தையே நீரே என் தந்தை
என் சுமைகளை உம்மேல் வைத்து விடுகின்றேனே
என் சுவாசமானது உம்மை என்றும் நம்புகிறதே
உம் பிரசன்னம் எனக்கு போதும்
உம் வலது கரம் என்னை தாங்கும்
உம் நிழலில் நான் என்றும் வாழனும்
உம் மகிமையால் என்னை சூழ்ந்திடும்
Bridge:
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
உம் நாமத்தை சொல்லி நான் துதிப்பேனே
வாழ்கையை பார்க்கிலும் அன்பு பெரியதே
என் உதடுகள் உம்மை என்றும் போற்றிடுமே