Devanai Thuthiyungal 150 Women

சங்கீதம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனை துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்
தேவனை துதியுங்கள் ..Ah ha ha.. -2
தேவனை துதியுங்கள் பரிசுத்தஸ்தலத்தில்
எப்போதும் துதியுங்கள் அல்லேலுயா
வல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை
மாட்சி உள்ள மகத்துவத்திற்காக
அவரைத் துதியுங்கள் எப்போதுமே
எக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை
தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே
கை தாள ஓசை பேரோசை மேளத்தோடும்
அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை