Devaprasannam (Prasannam Prasannam)

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ பிரசன்னம்(4)
ஏங்குதே கதறுதே
என் உள்ளம் துடிக்குதே
பிரசன்னம் பிரசன்னம்
மகிமையின் பிரசன்னம்
மாறாத பிரசன்னம்
தேவ பிரசன்னம்
1. மலை போன்ற சோதனை நேர்ந்தாலும்
இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும்
சத்ருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும்
சவால்கள் என்னை தகர்க்க செய்தாலும்
உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேறுவேன் – பிரசன்னம்
2. கர்த்தரின் நாமம் பெலத்த துருகமே
சுகமாய் இருப்பான் நீதிமான் அதற்குள்
பர்வதங்கள் மெழுகு போல் உருகிடும்
உம் பிரசனத்தால் உருகி போய் விடும்
உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேறுவேன் -பிரசன்னம்
3. உம் சமுகம் எனக்கு முன்பாக சென்றிடும்
இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர்
உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
நீர் என்னோடு என்றும் கூடவே வருவதால்
உம் பிரசனத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேறுவேன் -பிரசன்னம்