Devareer Neer Sagalamum Seiya Vallavar Devareer Neer Sagalamum Seiya Vallavar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார் -2
நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
நீர் செய்வதை தடுப்பவன் யார் -2 -தேவரீர்
1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்
சர்வ வல்லவர் நீர் தானே -2 -தேவரீர்
2. தடைகளை உடைப்பவர் நீர் தானே
தடுப்பவர் எவரும் இங்கில்லையே
கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்
கன்மலையே உம்மை துதித்திடுவேன் -2 -தேவரீர்
உமக்கு ஒப்பானவர் யார்
உமக்கு ஒப்பானவர் யார் -2
(இந்த) வானத்திலும் பூமியிலும்
உமக்கு ஒப்பானவர் யார் -2 – நீர் செய்ய நினைத்தது