eesan thuthi solla varum – Eesan Thuthi Solla Vaarum

ஈசன் துதி சொல்ல வாரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum
பல்லவி
ஈசன் துதி சொல்ல வாரும், -ஆசையுடன்
இத்தரையோர் யாரும்
சரணங்கள்
1.மாசில்லான் கிரியைகளில் வல்லவர், ஒன்னார் நடுங்க;
காசினி எல்லாம் அவரை கைகூப்பித் தெண்டனிடும். -ஈசன்
2.நரரிடையில் அவர் பலத்தால் நடத்தும் விந்தைதனைப் பாரும்
விரிகடலோ டாற்றை வெறும் தரை காணப் பிரித்துவிட்டார். -ஈசன்
3.வல்லமையாய் ஆளுகின்றார், சண்டாளர் அடிபணியார்;
எல்லாரும் அவர் புகழை ஏறெடுக்கும் காலம் வரும்.-ஈசன்
4.உத்தமரை ஆதரித்து, உயிரோடே வைத்திடுவார்;
பக்தர்களை வெள்ளி பொன் போல் பரிட்சித்துச் சுத்தஞ் செய்வார்.- ஈசன்
5.சத்துருக்கள் கையில் விழத் தள்ளினாலும் மறந்திடாமல்;
எத்துயர்க்கும் நீக்கி எம்மை இரட்சைபுரிந்தார் பரனார்.-ஈசன்
6.நேர்த்தி யாகம் படைப்போடு நிமலனின் வீட்டினில் ஏகி,
தோத்திரங்கள் கீர்த்தனங்கள் சொல்லுவன் நான் ஆனந்தமாய்
7. ஆண்டவரின் தொண்டர் வாரும், அவர் புரிந்த தயை சொல்வேன்,
வேண்டுதல்கள் செய்தேன், என் விண்ணப்பம் கேட்டிரங்கி விட்டார்.-ஈசன்
8.என் கேள்வி மறுக்காத, தன் கிருபை விலக்காத
சங்கை கடவுளர்க்குச் சதாகாலம் ஸ்துத்தியமே.-ஈசன்