ejamanan neengkaththane

எஜமானன் நீங்கத்தானே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எஜமானன் நீங்கத்தானே
என் எஜமானன் நீங்கத்தானே -2
உம் கரத்தையே நோக்கிடுவேன்
என்னை என்றும் நீர் நடத்திடுவீர்-2
1.கடல் அலைபோல
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்-2
நீர் சொன்னால் ஆகும்
கட்டளையிட்டால் நிற்கும்-2 – எஜமானன்
இரக்கம் செய்யும் வரைக்கும்
என் கண்கள் உம்மை பார்க்கும்-2
ஒத்தாசையும் கிருபையும்
நிச்சயம் எனக்கு உண்டு-2 -எஜமானன்
உந்தனின் சேவை செய்வேன்
எந்த சூழ்நிலையிலும்-2
என் ஜீவன் பிரியும் வரை
உண்மையாய் ஒடிடுவேன்-2 – எஜமானன்