El-Gibbor Lyrics

எல் கிப்போர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல் கிப்போர் எல் கிப்போர்
நீர் சர்வ வல்ல தேவனாம் -2
யோர்தானை கடந்தவர்
எரிகோவை தகர்த்தவர் -2
என்னோடும் இருப்பவர்
சர்வ வல்ல தேவனாம் -2
பார்வோனின் சேனையை அழித்தவராம்
செங்கடலை இரண்டாய் பிளந்தவராம் -2
யோசேப்பினோடே இருந்தவராம்
என்னோடென்றும் இருபவராம் -2
தேவாதி தேவனுக்கு கர்த்தருமாம்
ஒளியில் வாசம் செய்பவராம் – 2
ஆதியும் அந்தமும் ஆனவராம்
சர்வ லோகத்தை ஆள்பவராம் -2