El Shama

எல் ஷாமா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏக்கங்களை நீர் அறிந்திருக்கின்றீர்
என் பாரங்களை நீர் சுமந்திருக்கின்றீர்
ஆனாலும் ஏனோ சுமக்கின்றேன்
பதிலே நீர்தானையா
எல்ஷாமா என்னை கேட்பவரே
எல்ரோயீ என்னை காண்பவரே
1.உள்ளத்தின் ஆழங்களை அறிந்தவரே
மறைவாக உமக்கெதுவும் இல்லையே
மனதின் வலிகள் பெருகும்போது (உம்)
பிரமாணங்கள் கீதமாம்
கண்ணீரைக் கண்டதும் என் பக்கம் வருவீர்
ஆனந்த தைலத்தால் நிறைத்திடுவீர்
நெடுங்கால காத்திருப்பை நிறைவேற்றுவீர் (நான்)
மகிழ்ந்திருப்பேன் என்றென்றுமாய்