Eliyavanai Yesu paarkkindraar

எளியவனை ஏசு பார்க்கின்றார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார் ×2
கலங்காதே என் மகனே
உன் கண்ணீரைக் கர்த்தர் காண்கின்றார்
கலங்காதே என் மகளே உன் கஷ்டங்களைக் கர்த்தர் பார்க்கின்றார்
எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார்
கோரஸ்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ×2
சரணம் 1
மாரா தண்ணீர் மதுரமாக மாறலையா?
பாலை வனத்தில் கன்மலை ஆறாய் ஓடலையா ?
அக்கினி ஸ்தம்பம்
மேக ஸ்தம்பம் காக்கலையா?
இறைவன் ஏசு மன்னாவைத் தரவில்லையா?
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன்னைக் காப்பாரே இஸ்ரவேலின் கண்ணீரை இறைவன் ஏசு கண்டாரே
எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார்
கோரஸ்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா. ×2
சரணம் 2
அவமானங்கள் உன்னைச்சூழ்ந்து கொண்டாலும்
பரியாசங்கள் உன் மேல்
எழும்பி வந்தாலும்
சொந்தபந்தம் ஒதுக்கி
உன்னை வைத்தாலும்
வாழ்க்கையே தோல்விப் போல இருந்தாலும்
கலங்காதே திகையாதே கர்த்தர் உன்னைக் காப்பாரே அன்னாளின்
கண்ணீரை இறைவன் ஏசு கண்டாரே
எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார் ×2
கலங்காதே என் மகனே
உன் கண்ணீரைக் கர்த்தர் காண்கின்றார்
கலங்காதே என் மகளே உன் கஷ்டங்களைக் கர்த்தர் பார்க்கின்றார்
எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார் _2
கோரஸ்
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா _2