Ellam konnarnthen Iraiva song lyrics

எல்லாம் கொணர்ந்தேன் இறைவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எல்லாம் கொணர்ந்தேன் இறைவா
என்னையும் கொணர்ந்தேன் இறைவா
நீ கொடுத்த கொடைகளை நிறைவுள்ளதாக்கி
கொண்டு வந்தேன் உந்தன் பாதத்திலே
உழைப்பும் உயர்வும் நீ தந்தாய்
உவகையும் உண்மையும் நீ தந்தாய்
எல்லாம் உமது அருட்கரத்தால்
புனிதமாய் என்றும் வாழட்டுமே
இறைவா ஏற்பாய் ஏழை எனது காணிக்கையை
அறிவும் திறனும் நீ தந்தாய்
வரங்களும் வளங்களும் நீ தந்தாய்
வந்தேன் மகிழ்ந்து உன் பீடம்
தந்தேன் எனது உள்ளம்தனை
இறைவா ஏற்பாய் ஏழை எனது காணிக்கையை