ellame unthan kirupaiyallamal

எல்லாமே உந்தன் கிருபையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லாமே உந்தன் கிருபையல்லாமல்
வேறொன்றும் இல்லை ஓ இயேசய்யா
நான் உயிருடன் வாழ்வதும் உம் கிருபையல்லாமல்
வேறொன்றும் இல்லை ஓ இயேசய்யா
கிருபையே கிருபையே எல்லாமே உந்தன் கிருபையே (2)
அற்பமான என்னை ஆவியின் பெலத்தை தந்து
உம் சேவைக்கென்று அழைத்தது உங்க கிருபையே
பலவீனமான என்னை ஆவியின் பெலத்தை தந்து
பெலத்தால் பயன்படுத்தியது உங்க கிருபையே (2)
கஷ்டமான காலங்களில் சோர்ந்து போகாமல் நான்
எல்லா வேலையும் ஜெயித்தது உங்க கிருபையே
சோதனை நேரங்களெல்லாம் விழுந்து போகவிடாமல்
தாங்கியே முன்னடத்தியது உங்க கிருபையே (2)