elunthar elunthar yesu

எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எழுந்தார் எழுந்தார் இயேசு
ராஜனின்று உயிர்த்தெழுந்தார்-2
1. சாவின் கூரை ஒடித்தார்
சாவு கோட்டை ஜெயித்தார்
சாவின் மீது வெற்றி சிறந்தார் -2
2. மன்னுயிரை மீட்டிட
தம் உயிரை ஈந்தவர்
சாகா ஜீவன் பெற்று ஆள்கிறார்
3. கிறிஸ்துவுக்குள் மரிக்கும்
நம்மை அவர் உயிர்ப்பித்து
கெம்பீரமாய் மீண்டும் வருவார்
4. அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா ஆண்டவர்க்கே