Elunthar Iraivan Jeyame Jeyamanave

எழுந்தார் இறைவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்
1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க
3.கருதிய காரியம் வாய்க்கத்- தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்
இரு திறத்தாறையும் சேர்க்க
4.சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க
5.ஏதந் தீவினை செய்யாத் தூயன்,- எப்
போதுமே நன்மைபுரி நேயன்,- தப்
பாது காத்திடும் நல்லாயன்