emmai padaithavare pathukathavare

எம்மை படைத்தவரே பாதுகாப்பவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எம்மை படைத்தவரே பாதுகாப்பவரே
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் சமுகமதில் இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம்
தாரும் - பாதைக்கு வெளிச்சம் வசனம் (2)
2. சென்ற காலமெல்லாம் கர்த்தரின் நன்மைகள்
எத்தனை அதிகம் அதிகம்
வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்
இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
3. தூய பாதையிலே நாங்கள் நடந்து செல்ல
ஆவியின் கிருபை தந்திடும் - உம்மில்
அன்புகூர்ந்து நாங்கள் வாழ இன்று
நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்