en aatharame en ataikkalame

என் ஆதாரமே என் அடைக்கலமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஆதாரமே என் அடைக்கலமே
என் ஆதாரமே என் அடைக்கலமே
என் துணையாளரே என் நல் மேய்ப்பரே
1.என் வாழ்க்கை முடிந்ததென்று
நான் நினைத்த வேளையில்
நான் உண்டு என்று சொல்லி
எனை காத்த தெய்வமே
நீர் இல்லையென்றால்
நான் இன்று இல்லையே
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே – என் ஆதாரமே
உம் அன்பு போதுமே
உம் தயை வேண்டுமே
அபிஷேக நாதரே
அனல் மூட்டும் தேவனே
உம் சேவை செய்திட
எனை இன்று தருகிறேன்
பெலப்படுத்தும் என்னை பயன்படுத்தும் – என் ஆதாரமே
என் ஆதாரமே என் அடைக்கலமே பாடல் வரிகள், En Aathaaramae En Adaikkalamae Lyrics