en aaththuma karai aanathe – En Aathuma Karai Aanathae

என் ஆத்துமா கறை ஆனதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஆத்துமா கறை ஆனதே – En Aathuma Karai Aanathae
என் ஆத்துமா கறை ஆனதே
என் சிந்தைகள் விஷமானதே -2
என் நாவெல்லாம் பொய்யானதே
என் இருதயம் அழுக்கானதே
கழுவும் உம் ரத்தத்தால்
புதுப்பியும் உம ஆவியினால் -2
1. வேண்டாம் என்று ஒதுக்கிய பாவத்தை
மீண்டும் செய்து கசந்துபோனேன்
சுத்தமாய் இருந்த நெஞ்சை
குப்பை மேடாக மாற்றிவிட்டேன் என்னை மன்னியும் தேவா
சுத்தமாய் இருந்த நெஞ்சை
குப்பை மேடாக மாற்றிவிட்டேன் என்னை மன்னியும் ராஜா – கழுவும்
2.கலப்படம் இல்லாமல் வாழ முயன்றாலும்
வாழ்வின் சோதனையால் விழுந்துபோனேன்
மேன்மையன இருதயத்தை
எனக்குள்ளே வைத்திருந்தேன்
என்னையே அறியாமல் கல்லாய் மாற்றினேன் -2
என் ஆத்தும வெண்மை ஆனதே
என் சிந்தைகள் புதுமை ஆனதே -2
என் நாவெல்லாம் துதியானே
என் இருதயம் அழகானதே
கழுவினீர் உம் ரத்தத்தால்
உயிர்ப்பித்தீர் உம் ஆவியினால்