en aaththuma karththarai – En Aathuma Kartharai

என் ஆத்துமா கர்த்தரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai
கன்னிமரியாளின் கீதம் 100 (Magnificat)
1.என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது: என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
2.அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை: நோக்கிப் பார்த்தார்.
3.இதோ,இதுமுதல் எல்லாச் சந்ததிகளும்: என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
4.வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்: அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
5.அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு: தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
6.தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ் செய்தார்: இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
7.பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி: தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
8.பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி: ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
9.நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து: தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார்.
10.பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
11.ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான: சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.