En Aaththuma Naesa Maeypparae

என் ஆத்தும நேச மேய்ப்பரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே!
என் உள்ளத்தின் ஆனந்தமே!
இன்னும் உம்மைக் கிட்டிச்சேர நான்,
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பல்லவி
பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போது
ஆண்டவா! பிரியமானதை
இப்போ காட்டும்; செய்ய ஆயத்தம்!
2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்!
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும்
3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்;
கல்வாரி ஆவியால் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும் – பேசும்
4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையே நான் செல்வேன்;
ஆசித்துத் தாறேன் எனதெல்லாம்
மீட்பரே! வல்லமை தந்திடும் – பேசும்