en aaththumam aantavarai – En Aaththumam Andavarai

என் ஆத்துமம் ஆண்டவரை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என் ஆத்துமம் ஆண்டவரை – En Aaththumam Andavarai
என் ஆத்துமம் ஆண்டவரை
புகழ்கின்ற வேளையிது
என் ஆயன் அவரினிலே
மகிழ்கின்ற வேளையிது -/2
1.அன்பின் தேவன் அவர் -தினம்
அவர் குரல் கேட்டிடுவேன்
இரக்கத்தின் கடவுள் அவர் -அவர்
இதயத்தில் வாழ்ந்திடுவேன் -/2
அவர் அருகினிலே நான் இருப்பேன்-தினம்
அவர் வழி தனிலே நான் நடப்பேன்
அவர் வழி தனிலே நான் நடப்பேன் (என்-2)
2.நீதியின் மன்னர் அவர் -அவர்
நிழலினில் வாழ்ந்திடுவேன்
மகிழ்ச்சியின் நிறைவும் அவர் – என்
மனதினை மீட்டிடுவேன் -/2
அவர் அருகினிலே நான் இருப்பேன்-தினம்
அவர் வழி தனிலே நான் நடப்பேன்
அவர் வழி தனிலே நான் நடப்பேன் (என்-2)