en aaththumavil um aazham ariya neer en ullaththil um jeevan thantheer

என் ஆத்துமாவில் உம் ஆழம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஆத்துமாவில் உம் ஆழம் அறிய நீர் என் உள்ளத்தில் உம் ஜீவன் தந்தீர்
உம் பாதையை பின் தொடர உம் ஆவியில்
என்னை வழிநடத்தினீர்
நான் உம் பாதையில் உம்மை பின்தொடர
உம் ஆவியில் என்னை வழிநடத்தினீர்
நான் போகும் இடமெல்லாம் முட்களும் கற்களும் உண்டென்று நன்றாய் அறிந்தவர் நீர்
இயேசுவே என் கண்கள் உம்பாதம் பார்த்து
உம்பின்னே தினமும் செல்கின்றது
உம்மையேயன்றி வேறுஒன்றும் இல்லை
என் வாழ்வின் பெலன் நீரே எல்லாமே நீரே
இயேசுவையன்றி வேறுஒருவர் இல்லை
என் ஆத்துமாவின் ஜீவன் நீரே
நான் தடுமாறி நிலைமாறி வீழாமலே உம்
உள்ளம் கைகளில் என்னை தாங்கினீர்
வலப்புறம் இடப்புறம் சாயாமலே நான் பேகும் வழி என்னவென்று சொல்லி தந்தீரே
உம் திருவருளால் நான் பெற்ற உம்ஆவி என் உள்ளத்தில் பொங்கி வழிகின்றது
நான் ஒருநாளும் வெட்கமடைவதில்லை
அனுதினம் உம்வழிகளில் நடத்துகின்றீர்
என் ஆத்துமாவில் உம் ஆழம் பாடல் வரிகள், En Aathumavil Um Aazham Lyrics