en appaavin matiyilae

என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே
இயேசு அப்பாவின் மார்பிலே சாய்ந்திடுவேனே
என்னை அணைத்துக்கொள்வார்
என்னை முத்தம் செய்வார்
நான் அவருக்கும் எந்நாளும் செல்லப்பிள்ளை
நான் அவருக்கும் எந்நாளும் கண்ணுப்பிள்ளை
நான் அவருக்கும் எந்நாளும் தங்கப்பிள்ளை
கண் கலங்கும் வேளையில் கதறி அழும் நேரத்தில்
கலங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்
சோதனை நேரத்தில் சோர்ந்து போகும் வேளையில்
சோர்ந்திடாதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்
தத்தளிக்கும் வேளையில் தடுமாறும் நேரத்தில்
தயங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்