En Devanal Mudiyathathu Ondrum Illai

என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம்
வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
இல்லை வேறில்லை நாமம்
வன்மதி போல் உள்ள துன்பமும்
வன்கரத்தால் நீங்கிடும்
நேர்மையின் வழியில் நடந்தாள்
நன்மைகள் தினமும் தருவாரே
உன்மையுள்ளவர் நீதிமான்
கர்த்தர் மேலானவர்
என் யேசுவின் நாமத்தால்
சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு
இல்லை இல்லை
வசனம் விடுதலை தந்திடும்
விண்ணப்பம் கேட்பவரே
புலம்பும் இதயத்தை காண்பவர்
புதிய வழிகாட்டுவார்
வழுவாமல் என்றும் தாங்குவார்
தம் வழுவான கரங்களால் அனைப்பார்
உன்மையுள்ளவர் நீதிமான்
சேனைகளின் கர்த்தரே – வசனம் விடுதலை
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமிலையே – உம்மால்
கூடாதது ஒன்றுமிலையே