en intha patukal enakkaka – Yean Intha paadugal Enakkaga siluvaiyil

ஏன் இந்த பாடுகள் எனக்காக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil
ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்
மூன்றாணி தன்னிலே என் சிலுவை நாதா
உம் தூய இரத்தத்தால் என் பாவம் கழுவி
உம் சித்தம் செய்ய என்னை மாற்றுமே
காணாத ஆட்டை போல் சிதறி போய் இருந்தேன்
என்னை தேடி வந்து தோளில் சுமந்தீரே
1.பெலவீனன் எனக்கு உம் பெலன் தந்தீர்
யாருமில்லா எனக்காக பரிந்து பேசினீர்
உம் தூய வழியில் என்னை தினமும் நடத்தி
உம் பணி செய்ய என்னை மாற்றுமே
2.ஒடுக்கபட்டு இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
ஒன்றுமில்லா என்னை தேடி வந்தீரே
உம் தூய அன்பை விவரித்து சொல்ல
ஆயிரம் நாவுகள் போதாதையா