en inthiya thesam iratsikkappatanum iyesuve

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் இந்தியா தேசம் இரட்சிக்கப்படணும் இயேசுவே
என் வாஞ்சை அனுதினம் அதுவாய் மாறணும் இயேசுவே -2
இயேசுவே ரட்சியும்
தேசத்தில் எழுப்புதல் காணவே-2 -என் இந்தியா
1.கோடானகோடி ஜனம் மீட்கப்படணும் இயேசுவே-2
அழிந்துபோகும் ஆத்துமாக்கள் ரட்சிக்கப்படணும் இயேசுவே- 2
என் ஜெபமும் கண்ணீரும் அதுவாய் மாறணும் இயேசுவே-2
அதை ஒவ்வொரு நாளும் எனக்கு தாரும் ஏசுவே-2- இயேசுவே ரட்சியும்
2.இயேசுவை அறியா ஜனம் அறியவேண்டும் இயேசுவே-2
அறிந்த ஜனம் இயேசுவுக்காய் நிற்கவேண்டும் இயேசுவே-2
என் இந்தியா தேசம் எழுப்புதலை காணணுமே-2
என் கண்களும் அதனை காணத்துடிக்குது இயேசுவே-2- இயேசுவே ரட்சியும்
3..தேசத்தில் எழுப்புதல் ஆவி பரவ வேண்டும் இயேசுவே-2
இயேசு ஒருவரே தெய்வம் என்று தேசம் சொல்லணும்
இயேசுவே-2
திறப்பின் வாசலில் நிற்க ஜனங்கள் எழும்பனுமே-
அது ஒவ்வொரு சபையிலும் நிறைவேற வேண்டும் இயேசுவே -2- இயேசுவே ரட்சியும்