en ithaya theyvame ennil ezhunthu va – (2)

என் இதய தெய்வமே
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா – (2)
உன் உறவை எண்ணியே என் உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்
ஆனால் ஏசுவே உன் அன்பிற்கழிவுண்டோ – (2)
என் இனிய அன்பே எழுந்து வா
வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் இங்கு பலவுண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு
ஆனால் ஏசுவே நல் நண்பன் நீயன்றோ – (2)
என் இனிய நண்பா எழுந்து வா
என் இதய தெய்வமே பாடல் வரிகள், En Idhaya Dheivame Lyrics