en ithayam nonthu nonthu pookaiyile

என் இதயம் நொந்து
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் இதயம் நொந்து நொந்து போகையிலே
என் துணையாய் வந்து வந்து அணைப்பவரே -2
உங்க அன்பு உயர்ந்தது
உங்க பாசம் பெரியது -2 – என் இதயம்
தள்ளப்பட்ட கல்லாக தவித்து
நான் நிற்கையில தாங்கிட யாருமில்லை -2
தயங்காமல் வந்து தாங்கி பிடித்து
நான் இருப்பேன் என்றவரே -2 – உங்க அன்பு
உலகத்தின் மத்தியிலும் உறவுகள் மத்தியிலும்
உதறி தள்ளப்பட்டேன் -2
உன்னத தேவனே உம் கரத்தாலே
தூக்கி நிறுத்தப்பட்டேன் -2 – உங்க அன்பு
கண்ணீரே படுக்கையாய்
ஒவ்வொரு நாளும் எனக்கு ஆனதே -2
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
என்னோடு இருப்பவரே -2 – உங்க அன்பு