1.en jeevan, sukam, selvam

என் ஜீவன் சுகம் செல்வம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.என் ஜீவன், சுகம், செல்வம்
ப்ரதிஷ்டை செய்கிறேன்
உற்சாக பலியாக
நான் ஒப்புவிக்கிறேன்.
2.என் நாதா, அடியேனை
நீர் ஏற்றுக்கொள்ளுமே;
நான் உந்தன் சொந்தமாக
எந்நாளும் ஜீவிப்பேன்.
3.என் நெஞ்சில் நீரே வந்து
ப்ரசன்னமாகுவீர்;
ஏகாதிபதியாக
ஆங்காட்சி செய்குவீர்.
4.நீர் ஆளும், யேசு நாதா
என் ராஜாவாயிரும்
எக்காலும் அடியேனை
ஆட்கொண்டு நடத்தும்.
என் ஜீவன் சுகம் செல்வம் பாடல் வரிகள், En Jeevan Sugam Selvam lyrics