en makane en poothakaththai

என் மகனே என் போதகத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் மகனே என் போதகத்தை
நீ மறவாதே
அவைகளைக் காத்து நடந்துக்கொள்-(2)
1.உன் வழிகளெல்லாம் அவரை நினைத்துகொள்
உன் பாதைகளை செவ்வைப்படுத்தி நடத்துவார்-(2)
உன்னை ஞானியென்று எண்ணிக்கொள்ளாதே
தீமையை விட்டு விலகிடு- ( 2) – என் மகனே
2.உன் முதற்பலனால் கர்த்தரை கனம்பண்ணு
உன் களஞ்சியம் புரணமாய் நிரம்பிடும்-(2)
உன்னை கடியும்போது சோர்ந்துபோகாதே
சோர்வை நீ விட்டு விலகிடு-( 2 ) -என் மகனே
3.வேதத்தையே தியானித்து ஜெபம் பண்ணு
பயப்படாமல் அதின்படி நடந்திடுவாய்-(2)
திகிலின்போது அஞ்சி விடாதே
அவரையே அண்டி பற்றிக்கொள்-( 2 ) – என் மகனே