En Manamengum Niraindirukkum

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En Manamengum Niraindirukkum – என் மனமெங்கும் நிறைந்திருக்கும் Eva. வியாசர் லாரன்ஸ்
என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்ககும்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
தூதர் பாடி மகிழ – விண்ணோர்கள்
பண்பாட மண்ணோர்கள் கொண்டாட
என்றென்றும் மண்ணில் சமாதானமே…
1. பாடாத ராகமானேன்
ஒளிராத தீபமானேன் – விடியாத
இரவானேன் முடியாத கதையானேன்
எனது நிழலும் என்னை ஒதுக்கிட
எனது நிலை என்னவென்று நான் காணவே
என் கால்கள் என் பாதை
என் தீபம் என் தேவன்
எந்நாளும் நின்வேதம் என் கீதமே…..
2.கடல் மீது மழையானேன்
கானகத்தில் நிலவானேன் – மீட்டாத
வீணையானேன் எழுதாத கவியானேன்
சுமக்க முடியா சோக சுமைகள்
விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
பொல்லாத மாந்தர் செயல் மாறவே….
3. நிறமில்லா மலரானேன்
இனிப்பில்லா தேனானேன் – அனலின்றி
தணலானேன் விழிகளின்றி இமையனேன்
புதுமை மனிதம் புதிய உலகம்
விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
விண்மீன்கள் விண் தூதர்
விண் பாடல்கள் பாட எந்நாளும்
நம் வாழ்வில் கொண்டாட்டமே