en manasu lesa marisse

என் மனசு லேசா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் மனசு லேசா மாறிச்சே
என் பாரம் எல்லாம் நீங்கிசே
இயேசு எனக்குள் வந்ததால
வாழ்க்கை புதுசா மாறிச்சே
லேசா லேசா
மனசு பறக்குது லேசா -என்
மனசுல இயேசுவ நினைச்சதால
வாழ்க்கை மாறிடுச்சு புதுசா
சிறகடிக்கும் பறவையை போல
உயரத்தில பறக்க வச்சாரு…
உன்னதரின் கரத்தில் என்னை அழகா வரைந்து வச்சாரு…
ஒசருத்தில தூக்கி வச்சு அழகு பார்த்தாரு-2 என்னை
யாருமே தர முடியா சமாதானம்
எனக்கு தந்தாரு
என் மனதின் ஆழத்தின்‌ அழுத்தம் அவர் அன்பில் தணிய செய்தாரு -2
அழுகையின் பள்ளத்தாக்கில்
என்னோடு அவர் இருந்தாரு
அக்களிப்பாக என்னை அகமகிழ
செய்தாரு-என்
துதிப்பாடல நாவில வைச்சாரு
என் தூயரத்தை மறக்க செய்தாரு
யாருமே தர முடியா அன்பை அள்ளி
எனக்கு தந்தாரு
எதிர்கால பயத்தின் அழுத்தம் அவர்
தயவில் மறக்க செய்தாரு-2
சோதனையின் காலத்திலும்
என்னோடு அவர்‌ இருந்தாரு
தப்பித்து பிழைக்கும் படி
கரைசேர செய்தாரு
மறுரூபத்தின் வாழ்க்கையை தந்தாரு
மனக்கவலைகள் பறக்க செய்தாரு
ஒருவரும் தர முடியா அளவற்ற
கிருபை தந்தாரு
எதிர் வரும் தீமைகள் எல்லாம் நன்மையாக
முடிய செய்தாரு
எதிரியின் யுத்தக்களத்தில்
என்னோடு அவர் இருந்தாரு
என் கைகள் ஓங்கி எழுந்து
ஜெயமெடுக்க செய்தாரு
சந்தோஷங்கள் முழங்கிட செய்தாரு
சமாதனத்தின் நிறைவை தந்தாரு