En Manavalan Yesu Lyrics

என் மணவாளன் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் மணவாளன் இயேசு வருவார்
எண்ணிலடங்கா தூதர்களோடே – 2
அவர் வரும் நாளை யார் அறிவார்?
ஆயத்தமாவோம் திருச்சபையே
வருகிறார் இயேசு வருகிறாரே !
ஆயத்தமாவோம் திருச்சபையே (2)
1.குற்றம் குறைகளை மன்னிக்கும் தேவன்
குறைகள் யாவையும் அறிக்கை செய்வோம் (2)
ஒருவிசை கூட எழும்பிடுவோம்
உயிரை கொடுத்து நாம் சேவை செய்வோம் (2)
வருகிறார் இயேசு வருகிறாரே !
ஆயத்தமாவோம் திருச்சபையே (2)
2.ஒன்றிரண்டு என ஆண்டுகள் கடந்தும்
செய்யத்தவறின பொறுப்புகளை – (2)
இனி வரும் நாளில் நமது கடன்
அதி விரைவாய் நாம் செயல்படுவோம் (2)
வருகிறார் இயேசு வருகிறாரே !
ஆயத்தமாவோம் திருச்சபையே (2)