en mukaththin kanneerai

என் முகத்தின் கண்ணீரை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் முகத்தின் கண்ணீரை
துடைத்தவரே இயேசையா
கரம் பிடித்து இந்நாள் வரை
நடத்தி வந்திரே
இயேசையா இயேசையா
உம்மை போல் யாரும் இல்லை
தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை வெறுத்தாலும்
உயிராய் நேசித்த உறவுகள் பிரிந்தாலும்
நீங்க மட்டும் விலகலயே இயேசையா
என் நிழல்லாக கூட வந்தீரே
இயேசையா இயேசையா
உம்மை போல் யாரும் இல்லை
தனிமையின் பாதையிலே
உடைந்து நான் நிற்கயிலே
செய்வது அறியாது கலங்கிய வேளையிலே
நீங்க மட்டும் கூட இருந்தீர் இயேசையா
உம் கரங்களில் தங்கி கொண்டீரே
இயேசையா இயேசையா
உம்மை போல் யாரும் இல்லை