En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர் – 2
மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாக்கிடுவார்
மகிமையில் சேர்த்திடுவார் – 2
1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,
முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் )
2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2
மேகங்களுடனே வருகிறார்,
குத்தின கண்கள் யாவும் அவரை காணும் – 2 (மாறிடாத நேசர் )
3) தேவனின் மகிமை பிரகாசிக்கும்,
கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார் – 2
ராஜாதி ராஜா அரசளுவார்,
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் – 2 (மாறிடாத நேசர் )
என் நேசர் அழகுள்ளவர் பாடல் வரிகள், En Nesar Azhagullavar Lyrics