en nesar iyesu

என் நேசர் இயேசு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் நேசர் இயேசு
அவர் மார்பினில் சாருவேன்
அவர் நேசம் திராட்சை ரசத்திலும்
இன்பமானது அது இனியதானது
வெண்மையும் சிவப்புமானவர்
பதினாயிரங்களில் சிறந்தவர்
தலை தங்கமையமானது
தலை சிறந்த அழகு நிறைந்தவர்
நான் பாடுவேன் நான் ஆடுவேன் துதி சாற்றுவேன்
என் நேசரை (2)
1. நான் சோரும் வேளையில்
அவர் நேசம் தேற்றிடும்
நான் விழுந்த போதிலும்
காய கரத்தால் தூக்குவார் (2)
(என் நேசர்..)
2. நான் நொருங்கும் வேளையில்
அவர் கரத்தால் தாங்குவார்
நான் பயந்த போதிலும்
தம் சிறகால் மூடுவார் (2)
(என் நேசர்..)
என் நேசர் இயேசு பாடல் வரிகள், En nesar yesu lyrics