en nesar yesuve ummai

என் நேசர் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் நேசர் இயேசுவே
உம்மை துதித்துப் பாடுவேன்
உம் கிருபை என்றும் என்னை நடத்துமே
நீர் அற்புதர் என் வாழ்விலே
நீர் பெரியவர் என் வாழ்விலே
என்னை நேசிக்கும் தெய்வம் நீர் ஒருவரே
1. உந்தன் வசனம் அனுதினமும்
ருசித்துப் பார்க்கின்றேன்
எந்தன் உள்ளத்தில் ஜீவநதி பெருகி ஓடுதே
உந்தன் சிறகின் நிழலிலே
என்னை மறைந்து காக்கின்றீர்
செம்மையான பாதையிலே
என்னை நடத்திச் செல்கின்றீர்