en paatukul oru raagam

என் பாட்டுக்குள் ஒரு ராகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் பாட்டுக்குள்
ஒரு ராகம் இருக்கு
சொல்லி தெரியுமா – அந்த
இராகத்துக்குள் சோகமுண்டு
சொல்லி புரியுமா
சுனாமி… சுனாமி
ஏழை மக்களையே
வாரிப் போன பினாமி
படுத்துறங்கின பிஞ்சுகள்
பகலப் பார்க்கவில்லை
பகலவன் ஒளியும் கூட
உலகில் தெரியவில்லை
படுத்த பாய் கூட ஜனங்கள்
மடிச்சிப் போடவில்லை
பாழாப்போன கடலு
அள்ளிப்போனதய்யா உள்ளே
மலைபோல மனிதர்களை
வாழ வைத்த கடலே
உளையாய் நொடிப்பொழுதில்
உருக்குலைத்த கடலே
செழிப்பாக மக்களை வாழ
வைத்த கடலே – இப்ப
தெருவெங்கும் பிண வாடயை
வீச வைத்த கடலே
தேவனின் கோபமிதோ என்று தோணுதே
திருந்தினால் மனித வாழ்வு உயருமெங்குதே
காலமோ கடைசி என்று சூழல் சொல்லுதே
இனியொரு சுனாமி வேண்டாம் எந்தன் சாமி
இனியொரு சுனாமி தாங்காது பூமி