En Paavathin Nivarthiyai

என் பாவத்தின் நிவர்த்தியை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

1 என் பாவத்தின் நிவிர்த்தியை
உண்டாக்க அன்பாம் ஜீவனைக்
கொடுத்து, சிலுவையிலே
மரித்த தேவ மைந்தனே.
2.எல்லாருக்கும் நீர் ரட்சகர்,
தவிப்புள்ளோர்க்கு ஆதரவு;
மருந்து நீர், ஆ! என்னையும்
குணப்படுத்தி ரட்சியும்.
3.எனது தஞ்சம் ஆனீரே;
குணம் அளியும், யேசுவே;
அசுத்தமான யாவையும்
நிவிர்த்தியாக்கி அருளும்.
4.இருண்ட நெஞ்சில் ஒளியும்
மெஞ்ஞானம் விசுவாசமும்
கொடுத்தென் பாதை காட்டவே,
ப்ரகாசியும், விண் ஜோதியே!
5 நான் சாகும்போதென் ஆவியை
மோட்சானந்தத்தில் உம்மோடு
சேர்த்தென்னை உம்மால் என்றைக்கும்
திருப்தியாக்கியருளும்